இரண்டாவது முறையாக டேவிட் வார்னர் தனித்துவமான சாதனை

இரண்டாவது முறையாக ஒரே அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 7 முறை அரைசதம் அடித்து புதிய சாதனை செய்துள்ளார் டேவிட் வார்னர்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் கடந்தாண்டு ஐ.பி.எல் தொடரை தவறவிட்டார் டேவிட் வார்னர். இந்த ஆண்டு மீண்டும் சன் ரைசர்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்ற ஆண்டுக்கும் சேர்த்து வைத்து இந்தாண்டு ரன்களை குவித்து வருகிறார் வார்னர்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள வார்னர் 369 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் (70 ரன்) அரைசதம் கடந்து அசத்தினார். இந்த த்தின் மூலம் ஐ.பி எல் வரலாற்றில் தனித்துவமான சாதனையை செய்துள்ளார் வார்னர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 2015ம் ஆண்டு முதல் நேற்றைய போட்டி வரை தொடர்ச்சியாக 7 போட்டிகளில் 7 அனரசதம் அடித்து சாதனை செய்துள்ளார்.

இதற்கு முன் ஒரு முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு எதிராக கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 7 போட்டிகளில் 7 அரைசதம் அடித்து அசத்தினார்.

ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக அரைசதம் அடித்தவர்கள்:
டேவிட் வார்னர் Vs ஆர்.சி.பி – 7 முறை (2014 – 2016).
டேவிட் வார்னர் Vs கிங்ஸ் லெவன் – 7 முறை (2015 – 2019*).
கிறிஸ் கெய்ல் Vs கிங்ஸ் லெவன் – 4 முறை (2012 – 2013).
ஜாஸ் பட்லர் Vs கிங்ஸ் லெவன் – 4 முறை (2017 – 2019).

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.