என் வாழ்வில் ஒளி ஏற்றிய இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான்

கடந்த 2014ம் ஆண்டு 19 வயது சிறுவனாக கொல்கத்தாத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றார் குல்தீப் யாதவ். கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.

தனது 24 வயதில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை இந்திய அணியிலும் தனக்கென ஒரு இடம் பிடித்து விட்டார். உலகின் தலைசிறந்த பவுலர், மிஸ்ட்ரி ஸ்பின்னர் எனவும் பெயர் எடுத்துவிட்டார்.

இந்நிலையில் தான் இந்த நிலைக்கு உயர எந்த கிரிக்கெட் வீரர்கள் உதவி செய்தனர் என்ற ரகசியத்தை தற்போது கூறியுள்ளார். அவர் கூறியதாவது.,

நான் கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய ஆளாக வர உதவியவர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் மற்றும் ஆஸ்ரேலியா கழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆகியோர் தான்.

கம்பீரை கடந்த 2014ம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக சந்தித்தேன். எனக்குள் இருந்த திறமையை கண்டு கொண்ட கம்பீர் பல இக்கட்டாண சூழ்நிலைகளில் என்னை பந்து வீச அழைத்துள்ளார். பல முறை தவறு செய்த போதும் எனக்கு ஊக்கமும் தைரியமும் கொடுத்தார். அவர் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்தார். நான் கிரிக்கெட்டில் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என நினைத்தார். அதற்கான உதவிகளையும் செய்தார்.

அடுத்தது ஷேன் வார்னே, இவரை கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்ரேலியா அணி இந்தியா சுற்று பயணம் மேற் கொள்ளும் போது சந்தித்தேன். அன்றிலிருந்து இன்று வரை எனக்கு சிறந்த நண்பனாக இருந்து வருகிறார். தினமும் நாங்கள் இருவரும் வாட் சாப்பில் சாட் செய்வோம்.

2018ம் ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்ரேலியா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள போது, தினமும் காலையில் பயிற்சியின் போது என்னை சந்திப்பார். நான் செய்யும் தவறுகளை சுட்டி காட்டுவார். புது புது தந்திரங்களையும் கற்று தருவார் என குல்தீப் கூறியுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.