ஐ.பி.எல்லை வைத்து கோலியை எடை போடாதீர்கள் திலிப் வெங்சர்க்கார் கருத்து

உலகின் தலை சிறந்த வீரராக இருக்கும் விராட் கோலி கடந்த 3 மூன்று மாதங்களாக கேப்டனாக பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணியின் கேப்டனாக இழந்தார் லிராட் கோலி. அதனை தொடந்து ஐ.பி.எல் தொடரில் கோலி வழி நடத்தும் பெங்களுர் அணி முதல் 6 போட்டிகளில் தோற்று ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

இதனால் பல முன்னாள் வீரர்களும் லிராட் கோலியின் கேப்டன்சியை விமர்சனம் செய்ய ஆரமித்து விட்டனர். கம்பீர் விராட் கோலியை அப்பிரண்டீஸ் கேப்டன் என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் விராட் கோலியை இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக நியமிக்கும் படி பல கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளை கொண்டு விராட் கோலியின் கேப்டன்சியை எடை போட வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் பேட்டியளித்துள்ளார்.

விராட் கோலி மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் பேட்டிகளில் நல்ல ஃபார்மில் உள்ளார். அவர் உலகின் தலை சிறந்த கேப்டன்களுள் ஒருவர்.

ஐ.பி.எல் போட்டிகளை வைத்து விராட் கோலியின் பேட்டிங்கையும், கேப்டன்சியையும் எடை போடக் கூடாது. அவர் ஒருநாள் மற்றும் உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்.

உலகப் கோப்பைக்கான இந்திய அணி 4ம் வரிசை வீரரை ஐ.பி.எல் போட்டிகள் கொண்டு தேர்வு செய்வது தவறானது. அந்த இடத்திற்கு அனுபவ வீரர் அஜங்கியா ரகானே அல்லது கே.எல் ராகுலை நியமிப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.