மாத்தி யோசிச்ச சென்னை அணி ஸ்கெட்ச் ரஸலுக்கு இல்ல இவங்களுக்கு தான் ஃளெமிங் பேட்டி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிந்த உடனே “இன்னும் 3 நாள்ல வாரோம் முடிஞ்சா ஜெயிச்சு பாருங்க” என்ற ரீதியில் ஒரு டுவிட்டை தட்டி விட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

இவ்விரு அணிகளும் புள்ளி பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதும், இப்போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் என்பது இப்போட்டிக்கான எதிர்பார்ப்புக்கு இன்னொரு காரணம்.

இன்றைய போட்டியில் சென்னை அணிக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்க போவது ஆன்ரே ரஸல் தான். அவர் இதுவரை இந்த ஐ.பி.எல் வெறும் 70 பந்துகளை மட்டுமே சந்தித்து 209 ரன்கள் மற்றும் 22 சிக்சர்களை விளாசியுள்ளார்.

இதனால் ஆன்ரே ரஸலை அவுட்டாக்க பல திட்டங்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை அணி ரஸலை குறி வைத்து நாங்கள் களம் இறங்க போவதில்லை என அந்த அணி பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

“ஆன்ரே ரஸல் தற்போது அபாயகரமான ஃபார்மில் உள்ளார் ஒத்துகொள்கிறேன். அதற்காக அவரை மட்டும் விக்கெட் எடுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி சென்றால் தோல்வி தான் கிடைக்கும்.

அந்த அணியில் ரஸலை தவிர்த்து ராபின் உத்தப்பா, தினேஷ கார்த்திக்  கில் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இவர்களை அவுட்டாக்க தான் புதிய வியூகங்களை வகுத்துள்ளோம். இவர்களை விரைவில் விக்கெட் எடுத்தான் தான் போட்டியில் வெற்றி பெற முடியும்.

ரஸலுக்கு என்று புதியதாக எதுவும் செய்யப் போவதில்லை அவருக்கு ஸ்பின்னர்களே போதும் என்றார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.