மும்பை அணியில் ஒரே ஒரு தைரியமான மாற்றம் தாங்குமா பஞ்சாப் அணி

ஐ.பி.எல் 12வது தொடரின் 24வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று இரவு 8 மணிக்கு வான்கடே மைதானத்தில் பலப்பரிட்சை நடத்துகின்றனர்.

முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டியில், கே.எல் ராகுலின் அதிரடி அரைசதத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியிடம் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை பெறாமல் இருக்கவும், புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காணவும் இன்றைய போட்டியை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் ஒரே ஒரு தைரியமான மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் நல்ல ஃபார்மில் இருக்கும் குவின்டன் டி காக் நீக்கப்பட்டு எவின் லூயிஸ் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 6 போட்டிகளில் களம் இறக்கப்படாத எவின் லூயிஸ், கடந்த சீசனில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி 350 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் மும்பை அணி : எவின் லூயிஸ், ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கைரன் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஹந்திக் பாண்டியா, ராகுல் சாகர், அல்ஜாரி ஜோசப், ஜஸ்பிரித் பும்ரா.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.