ரஸல் மீது கடும் அதிருப்தி தொடக்க ஆட்டக்காரர் போட்ட டுவிட்டால் பரபரப்பு

நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி பவர் பிளே முடிவதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கிறிஸ் லின் (O), நரைன் (4), உத்தப்பா (11), ராணா (0), தினேஷ் கார்த்திக் (19) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக, கொல்கத்தா அணி 16.3 ஓவரிலே 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது.

கடைசி விக்கெட்டுக்கு இங்கிலாந்து வீரர் ஹேரி கர்னி மற்றும் ஆன்ரே ரஸல் ஆகியோர் களத்தில் இருந்தன. கொல்கத்தா அணிக்கு கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் அநேக பந்துகளில் சிங்கில் எடுத்து ஹேரி கர்னிக்கு ஸ்ட்ரைக் கொடுக்க மறுத்தார் ரஸல். தனி ஆளாய் நின்று அதிரடி காட்டினார்.

இதனால் கொல்கத்தா அணி கடைசி 21 பந்துகளில் 29 ரன்களை குவித்தது. ரஸல் 44 பந்துகளில் 50 ரன்களையும், கர்னி 5 பந்தில் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ரஸல் ஆட்டத்தால் கொல்க்ததா அணி 20 ஓவர் முடிவில் 108/9 என்ற கெளரவ நிலைக்கு சென்றது.

ஹேரி கர்னிக்கு ஆன்ரே ரஸல் தொடர்ந்து ஸ்ட்ரைக் கொடுக்க மறுப்பதை பார்த்து அதிருப்தி அடைந்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டுவிட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில் ரஸல் ஹேரி கர்னி அடித்த ஆன் தி அப் ஷாட்டை பார்க்கவில்லை. ஹேரி கர்னி சிறந்த டி20 வீரர். அவருக்கு ஸ்ட்ரைக் கொடுங்க ரஸல் என டுவிட் போட்டுள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸின் டுவிட்டை பார்த்த கொல்கத்தா ரசிகர்கள் தற்போது ஹேல்ஸை திட்டி வருகின்றனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.