ரோகித் சர்மாவுக்கு தொடையில் காயம் இன்றைய போட்டியில் பங்கேற்பாரா

இந்தாண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றிகளை குவித்து வருகிறது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 2ல் தோல்வியையும், 4ல் வெற்றியையும் ருசித்துள்ளது அந்த அணி.

முந்தைய போட்டியில் பலமான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, நான்காவது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இன்று எதிர் கொள்கிறது.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி .

இந்நிலையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த ரோகித் சர்மாவுக்கு வலது காலின் தொடை பகுதியில் காயம் (தசை நார்களில் பிடிப்பு) ஏற்பட்டுள்ளது. காயத்தால் மிகுந்த வலியில் அவதிபுற்ற ரோகித் சர்மா, நொண்டி கொண்டே ஓய்வறைக்கு திரும்பியுள்ளார். இதன் பின் மீண்டும் பயிற்சிக்கு திரும்பவில்லை.

ரோகித் சர்மாவின் காயம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையில், இன்றைய போட்டியில் பங்கேற்பாரா என தெரியவில்லை. ஒரு வேளை காயம் பெரியதாக இருக்கும் பட்சத்தில் இன்றைய போட்டியில் அவர் விளையாடமாட்டார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.