அவர் நிச்சயம் உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் ஸ்ரீகாந்த் திட்டவட்டம்

இன்னும் ஒரு சில நாள்களில், 2019 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவிக்க உள்ளது பி.சி.சி.ஐ. 15 இடங்களில் 11 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள அந்த 4 இடங்களில் யார் இடம் பெற போகிறார்கள் என தெரியவில்லை.

இந்திய அணிக்கு நான்காம் வரிசை வீரரை தேர்வு செய்வதில் எப்படி குழப்பம் நீடிக்கிறதோ, அதே போல் உலக கோப்பைக்கான இந்திய அணியில் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரரை தேர்வு செய்வதிலும் குழப்பம் நீடிக்கிறது.

தற்போது ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் மோசமான ஃபார்மில் உள்ளதால், இந்திய அணிக்கு மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர் கட்டாயம் தேவைப்படும் என பல முன்னாள் வீரர்கள் சுருத்து தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் கே.எல் ராகுல் சதம் விளாசினார். இதனை தொடர்ந்து கே.எல் ராகுலை உலக கோப்பை அணியில் மூன்றாவது தொடக்க ஆட்டக்காராக தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது., கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் கே.எல் ராகுலிடம் நல்ல வித்தியாசம் தெரிகிறது. போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப தனது பேட்டிங்கை மாற்றிக் கொள்கிறார். இந்தாண்டு ஐ.பி.எல் போட்டியில் 3 அரைசதம் மற்றும் 1 அரைசதம் அடித்துள்ளார். நல்ல ஃபார்முக்கு திரும்பி உள்ளார்.

இன்னமும் ரோகித் சர்மா மற்றும் தவானின் ஃபார்ம் கவலைகிடமாக உள்ளது. என்னை பொறுத்தவரை உலக கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுலை நிச்சயம் நான் எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.