கிரிக்கெட் வீரர்கள் கோடியில் சம்பளம் பெற சச்சின் டிராவிட் கும்ளே தான் காரணம் – சேவாக் அதிரடி

தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவதற்கு சச்சின், டிராவிட் மற்றும் கும்ளே ஆகியோர் தான் காரணம் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சர்வதேச பிரிமியர் லீக் தொடரின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர சேவாக் கலந்து கொண்டார். இந்நிகழ்சியில் அவர் பேசியதாவது.

தற்போது ஐ.பி.எல் விளையாடும் வீரர்களுக்கும், இந்திய அணியில் லினmயாடும் வீரர்களுக்கும் சம்பளமாக பெரிய தொகை தரப்படுகிறது. இதற்கு காரணம் 17 ஆண்டுகளுக்கு முன் ஊதிய உயர்வுக்காக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின், கும்ளே, டிராவிட் நடத்திய போராட்டம் தான்.

ஆரம்பத்தில் இந்திய வீரர்களுக்கு ஊதியமும், போட்டிகளில் வெற்றி பெற்றால் கிடைக்கும் வருவாயில் குறைந்த அளவு பங்கு மட்டுமே தரப்பட்து. அதாவது பி.சி.சி.ஐ க்கு கிடைத்த மொத்த வருவாயில் 20 சதவீத பங்குகளை எடுத்து அனைத்து இந்திய வீரர்களுக்கும் சரிசமமாய் பிரித்து கொடுத்தது. இதுதான் அவர்களது நிரந்தர வருவாயாய் இருந்தது.

இந்த பங்கை 26 சதவீதமா உயர்த்த வேண்டும் என இந்திய முன்னாள் வீரர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன் பின் பி.சி.சி.ஐ 26 சதவீத பங்கை தர ஒத்துக் கொண்டது.

இன்று கிரிக்கெட்டை விட வேறு எந்த விளையாட்டிலும் அதிக பங்கு தொகை வீரர்களுக்கு கிடைப்பதில்லை. இவர்களது போராட்டம் தான் தற்போதைய வீரர்களுக்கு கோடிகணக்கில் சம்பளம் வாங்க காரணம் என தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.