நான் அவரை தான் அடிக்க நினைத்தேன் பொல்லார்ட் பரபரப்பு பேட்டி

நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி மும்பை வெற்றி பெற 198 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இலக்கு பெரியது என்பதாலும், ரோகித் சர்மா போட்டியில் இல்லை என்பதாலும் இப்போட்டியில் பஞ்சாப் அணிதான் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் குவின்டன்-டி-காக், சூர்ய குமார் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

ஒரு முனையில் விக்கெட் சரிவதை பற்றி கவலைபடாத பொல்லார்ட், பஞ்சாப் அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தார். அவர் 31 பந்தில் 10 சிக்சர், 3 பவுண்டரியுடன் 83 ரன்களை குவித்தார். இதனால் மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின் தனது ஆட்டம் குநித்து பொல்லார்ட் பேட்டியளித்தார்.அதில் அவர் கூறியதாவது., இன்றைய போட்டியை வெற்றி பெறவும், 83 ரன்கள் அடிக்க வலிமையை தந்த கடவுளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் மனைவிக்கும் கூட.

நான் களம் இறங்கும் போது ஈரப்பதம் (Dew) அதிகம் இருந்தது. இதனால் அஸ்வினின் பந்தை தான் அதிகம் அடித்து ஆட வேண்டும் என நினைத்தேன். ஆனால் முடியவில்லை. சிறப்பாக பந்து வீசினார் அஸ்வின்.

நினைத்தது நடக்கவில்லை. அதற்காக நான் பதற்ற படவில்லை நிதானமாக இருந்தேன். மிடில் ஓவர்களில் ரன்களை குவித்தேன். மும்பை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றேன். மகிழ்ச்சியாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.