ராஜஸ்தான் அணி செய்யும் ஒரே ஒரு மாற்றம் சென்னைக்கு நூறு சதவீதம் வெற்றி உறுதி

இதுவரை லிளையாடி 5 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, தோல்விகளால் துவண்டு உள்ளது ராஜஸ்தான் அணி. கடைசியாக விளையாடிய கொல்கத்தா போட்டியை தவிர மற்ற 3 தோல்வியடைந்த போட்டிகளிலும் வெற்றியின் மிக அருகே சென்று தோல்வியடைந்துள்ளது ராஜஸ்தான்.

இதனால் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 7வது பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் லீக் போட்டியில் வலுவான சென்னை அணியிடம் 2வது முறையாக மோதுகிறது ராஜஸ்தான் அணி.

இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில், சென்னை பேட்டிங் செய்யும் போது கடைசி ஓவரில் 28 ரன்களை வாரி வழங்கினார் ஜெயதேவ் உனாத்கட். இந்த 28 ரன்களே சென்னை அணி வெற்றி பெற மிக உதவியாக இருந்தது.

இந்த போட்டி மட்டுமில்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் உனாத்கட்  சொதப்பினார். இதனால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் உனாத்கட் நீக்கப்பட்டு சுதேஷன் மிதுன் அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த போட்டியில் அவரும் 2 ஒலரில் 27 ரன்களை கொடுத்து தாராலம் காட்டினார்.

இதனால் இன்று சென்னைக்கு எதிரான போட்டியில் ஜெய்தேவ் உனாத்கட் மீண்டும் ராஜஸ்தான் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை இன்றைய போட்டியில் உனாத்கட் இடம் பெற்றால் சென்னையின் வெற்றி உறுதி.

எதிர்பார்க்கப்படும் ராஜஸ்தான் அணி: அஜங்கியா ரஹானே (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், ராகுல் திருப்பாதி, பென் ஸ்டோக்ஸ், பிரஷாத் சோப்ரா, மஹிபல் லோமிரர், ஸ்ரேயாஷ் கோபால், ஜோஃரா ஆர்ச்சர், ஜெயதேவ் உனாத்கட், தவல் குல்கர்னி.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.