ஸ்மித் மற்றும் வார்னருக்கு இரண்டு ஆண்டு தடை ஜாம்பவான் அதிரடி பேட்டி

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃட் ஆகியோர் பந்தை சேதப்படுத்தினர். இதனால் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்ரேலியா.

இந்த தடை கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 29ந் தேதியுடன் நீங்கியது. தற்போது இருவரும் ஆஸ்ரேலியா அணிக்காக விளையாட தகுதியுடன் உள்ளனர். விரைவில் உலகப் கோப்பைக்கான ஆஸ்ரேலிய அணியில் இடம் பெறுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்மித் மற்றும் வார்னருக்கு இரண்டு ஆண்டு தடை விதித்திருக்க வேண்டும் என வெஸ்ட் இன்ட்ஸ் லெஜன்ட் கர்ட்லி அம்ப்ரோஸ் கூறியுள்ளார்.

கிரிக்கெட் விதிமுறைகள் வீரர்களால் உடைக்கப்படும் பொழுது அதற்கு தண்டனை என்பது அவசியம். ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்தியது கிரிக்கெட்டை கொலை செய்ததற்கு சமம். அவர்களுக்கு ஓராண்டு அல்ல இரண்டு ஆண்டு தடை விதித்திருக் வேண்டும்.

அவர்கள் மீண்டும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஆஸ்ரேலிய உலக கோப்பை அணியில் அவர்கள் இடம் பெறுவார்கள் என நம்புகிறேன், என அவர் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.