சென்னை மற்றும் ராஜஸ்தான் போட்டி பற்றி கங்குலி என்ன சொன்னார் தெரியுமா?

நேற்று இரவு நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அமைந்தது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணிக்கு பட்லர் அதிரடி தொடக்கம் தந்தார். இருந்தாலும் அந்த அணியின் எந்த வீரரும் 30 yன்களை கூட எடுக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓலர் முடிவில் 151/7 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி பவர் பிளே முடிவதற்கு நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுந்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ராயுடு ஆகியோர் நிதானமாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ராயுடு 57 ரன்னில் அவுட்டானார். இதனையாந்தது சென்னை வெற்றி பெற கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரின் முதல் பந்தை படுத்து கொண்டே சிக்ஸர் விளாசினார் ஜடேஜா. இரண்டாவது பந்தை பென் ஸ்டோக்ஸ் நோ பாலாக வீச, அந்த பந்தில் 4 ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தில் சிக்சர் அடிக்க முயற்சி செய்த தோனி 53 ரன்களுக்கு போல்டானார். இதனால் போட்டியில் பரபரப்பு தொற்றி கொண்டது. கடைசி பந்தில் வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட, மிட்செல் சாண்ட்னர் சிக்ஸ் அடித்து முடித்து வைத்தார. இதனால் சென்னை அணி த்ரில் பெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி டுவிட் ஓன்றை போட்டுள்ளார். அதில் அவர் “என்ன மாதிரியான ஐ.பி.எல் தொடர் இது…. ஓவ்வொரு போட்டியும் நம்ப முடியாத வகையில் உள்ளது… இது போன்ற ஆட்டத்தை நேற்று மும்பை தந்தது இன்று சென்னை தந்துள்ளது.. இந்த வருட உலக கோப்பை போட்டிகள் தெறிக்க போகுது.” என பதிவிட்டுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.