டேல் ஸ்டெயின் கொடுத்த சர்ப்ரைஸ் சி.எஸ்.கே அணியில் இணைகிறாரா?

தென் ஆப்ரிக்க அணியின் முன்னனி வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இவர் கடந்த ஓரிரு ஆண்டுகளாக அடுத்தடுத்து ஏற்படும் காயங்களால் அவதியுற்று வந்தார். இதனால் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் டேல் ஸ்டெயினை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. ஸ்டெயின் கடைசியாக 2016ம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதனை தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஐ.பி.எல்லில் விளையாடவில்லை.

தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கும் ஸ்டெயின், தென் ஆப்ரிக்க அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட விசா வழங்கப்பட்டுள்ளது.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்டெயின். மேலும் புகைப்படத்தில் ஒரு சில பகுதிகளை கோடிட்டு அடித்து விட்டு, நான் ஏன் வருகிறேன் என்ற சர்ப்ரைஸை கண்டுபிடியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் சி.எஸ்.கே அணி காயம் காரணமாக வெளியேறிய லுங்கி இங்கிடிக்கான மாற்று வீரராக ஸ்காட் குகோலிஜின் ஒப்பந்தம் செய்தது. ஆனால் டேவிட் வில்லிக்கு மாற்று வீரரை இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் டேல் ஸ்டெயின் சி.எஸ்.கே அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் டேல் ஸ்டெயின் நேதன் குல்டர் நைலுக்கு மாற்று வீரராக ஆர்.சி.பி அணியால் ஓப்பந்தம் செய்யப்படவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. டேல் ஸ்டெயின் எந்த ஐ.பி.எல் அணியில் விளையாடுவார் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கீழே கமெண்ட் பண்ணுங்க..

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.