தோனிக்கு 50% அபராதம் விதிப்பு

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் சென்னை வெற்றி பெற கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். ஓவரின் முதல் இரண்டு பந்தில் 10 ரன்களை சேர்த்தது சென்னை. இதனால் சென்னை எளிதில் வெற்றி பெற்று விடும் என நினைத்த போது, தோனி 58 ரன்களில் போல்டாகி அவுட்டானர்.

போட்டி பரபரப்பானது. 3 பந்துகளில் 8 ரன் தேவைப்பட்டது. 4 வது பந்தை ஸ்டோக்ஸ் வீசினார். இந்த பந்து நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த நடுவரால் நோ பால் (புல் டாஸாக பந்து இடுப்புக்கு மேல் சென்றதால்) என அறிவிக்கப்பட்டு ஃபிரி ஹிட் தரப்பட்டது.

இந்த பந்து நோ பால் அல்ல சரியான பந்து தான் என லெக் திசையில் இருந்த நடுவர் கூற, நோ பால் மற்றும் ஃபிரி ஹிட் திரும்ப பெறப்பட்டது.

நோ பால் தரப்பட்டு பின் திரும்ப பெறப்பட்டதால் பெவிலியனில் இருந்த தோனி குழப்பம் அடைந்தார். இதனால் தோனி நேராக மைதானத்தில் இருந்த நடுவர்களிடம் சென்று விசாரித்தார். பின் காரணத்தை நடுவர்கள் விளக்கி கூற தோனி மைதானத்தில் இருந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து சென்னை வெற்றி அணி பெற்றது.

இது போன்று தோனி நடந்து கொண்டது லெவல்-2 குற்றமாகும். மேலும் ஐ.பி.எல் விதிமுறை 2.20 யையும் உடைத்துள்ளார் தோனி. இதனையடுத்து தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை தோனி பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டார். இதனால் தோனிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 50% . அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.