தோனி செய்தது சரியா ஆவேசமாக பேட்டியளித்த ஜாஸ் பட்லர்

நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் 6 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது சென்னை அணி.

இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பரபரப்பான கடைசி ஓவரின் 4வது பந்து முதலில் நோ பால் என நடுவரால் அறிவிக்கப்பட்டது. அதன் பின் நோ பால் என்ற அறிவிப்பு நடுவர்களால் திரும்ப பெறப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த தோனி, மைதானத்திற்குள் விறுவிறுவென நடந்து சென்று நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

இதனை தொடர்ந்து தோனி ஐ.பி.எல் விதிமுறைகளை மீறியதாக கூறி, போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது பி.சி.சி.ஐ.

இந்நிலையில் தோனி மைதானத்தில் நடந்து கொண்டது சரியா? என கேள்வி எழுப்பி உள்ளார் ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்டலர். அவர் கூறியதாவது.,

தற்போது ஐ.பி.எல் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய போட்டியில் கடைசி ஓவர் தான் மிக முக்கியமானது. அந்த சூழ்நிலையில் ஒவ்வொரு ரன்னும் வெற்றிக்கு இன்றியமையாதது தான். அதற்காக தோனி அவுட்டான் பின் மீண்டும் மைதானத்திற்குள் வரலாமா, இது விதிமுறை மீறல். நடுவர்கள் முடிவு எடுத்த பின் தோனி சென்று நடுவர்களிடம் வாக்குவாதம் செய்வது முறையானது அல்ல. இது ஐ.பி.எல் போட்டிகளுக்கு நல்லதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.