தோனி மற்றும் அஸ்வினை கடுமையாக சாடிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடர் வேறு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அதிக சர்ச்சைகளை சந்தித்துள்ளது.

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில், ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்து சர்ச்சைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின். அஸ்வினின் இந்த செயலுக்கு பல முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று சென்னை மற்றும் ராஜஸ்தானுக்கு இடையிலான போட்டியில், 19.ஓவரின் 4வது பந்தை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த பந்து புல் டாஸாக இடுப்புக்கு மேல் சென்றது என கூறி நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த நடுவர் நோ பால் என சிக்னல் செய்தார்.

ஆனால் ஸ்கொயர் லெக்கில் இருந்த நடுவர் பந்து சரியானது எனக் கூறி நோ பால் என்று அறிவித்ததை திரும்ப பெற்றார். இதனால் கடுப்பான தோனி பெவிலியனில் இருந்து மைதானத்திற்குள் வந்தார். நடுவர்களிடம் வாக்கு வாதம் செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தோனியின் இந்த செயல் முறைக்கு பி.சி.சி.ஐ அபராதம் விதித்துள்ளது.

இந்நிலையில் அஸ்வின் மற்றும் தோனியின் இந்த செயலுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார்.

எனக்கு தெரியும். ஐ.பி.எல் அதிகம் பணம் புழங்கும் விளையாட்டு. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என வீரர்கள் மீது அணி உரிமையாளர்கள் அதிக அழுத்தம் தருகின்றனர்.

ஆனாலும் தனது அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்து, உலகின் தலை சிறந்த வீரர்களாக தோனி மற்றும் அஸ்வின் ஆகியோர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிருப்தியை தருகிறது. இது ஐ.பி.எல் தொடருக்கு நல்லதல்ல என ட்விட் செய்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.