நான் சதம் அடிக்காதற்கு இதுதான் காரணம் தவான் பரபரப்பு பேட்டி

நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில், கொல்கத்தா அணியை 7 விக்கெட் லித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி .

இப்போட்டியில் சமீப காலமாக மோசமான ஃபார்மில் இருந்த ஷிகர் தவான் மீண்டும் நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளார். தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய தவான் 63 பந்தில் 2 சிக்சர், 11 பவுண்டரி உட்பட 97* ரன்களை குவித்தார்.

தவான் 96 ரன் எடுத்திருந்த போது ஒரு பவுண்டரி அடித்து சதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சிங்கிள் மட்டும் எடுத்து காலின் இங்ரமுக்கு ஸ்ரைக் கொடுத்தார். இங்ரம் ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால் தவானின் சதம் 3 ரன்னில் தவறியது. இந்நிலையில் நான் ஏன் சிங்கிள் எடுத்து சதத்தை தவறவிட்டேன் என்பதை விளக்கி உள்ளார் தவான்.

போட்டி முடிந்த பின் அவர் கூறியதாவது., கொல்கத்தா பிட்ச் டெல்லி பிட்க்கு நேர் எதிர். இங்கு நன்றாக பேட் செய்யவும் முடியும், பந்து வீசவும் முடியும். இதனை தினேஷ் கார்த்திக்கிடம் முன்பே தெரிவித்தேன்.

எனக்கு தெரியும், நான் பவுண்டரி அடித்திருந்தால் இது எனது முதல் டி20 சதமாக இருந்திருக்கும். எனது தனிப்பட்ட சாதனையை விட அணி வெற்றி பெறுவது தான் முக்கியம். முந்தைய போட்டியில் எங்கள் அணி இது போன்ற நேரங்களில் அதிக விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்துள்ளது. அது நடக்க கூடாது என்பதால் சிங்கில் எடுத்தேன். இங்ரம் சிக்ஸ் அடித்து போட்டியை முடித்தார். மகிழ்ச்சி தான் கவலை ஏதும் பெரிதாய் இல்லை என அவர் தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.