இன்னும் ஒன்றே ஒன்று தான் தேவை டிவில்லியர்ஸ் விறுவிறு பேட்டி

முதல் 6 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த பெங்களுர் அணி, நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர் கொள்கிறது பெங்களுர் அணி. இப்போட்டி குறித்து பெங்களுர் அணியின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது.

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக கிடைத்த முதல் வெற்றி எங்கள் அணிக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. அடுத்தடுத்த தோல்விகளை எங்கள் அணி சந்தித்த போது விராட் கோலி மற்றும் கேரி கிறிஸ்டன் ஆகியோர் தான் வீரர்கள் மனம் தளராமல் பார்த்து கொன்டனர்.

நாளை நடைபெற உள்ள மும்பை அணிக்கு எதிரான போட்டி மிக முக்கியமானது. சொல்லப்போனால் அடுத்துதடுத்து வரும் அனைத்து போட்டிகளும் எங்களுக்கு முக்கியமானது தான்.

மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிக கடினம் தான். கடினம் என நினைத்தால் எதையும் சாதிக்க முடியாது. நாளைய போட்டியில் வெற்றி பெற எங்கள் முழு திறமையையும் காட்டுவோம்.

ரோகித் சர்மா, குவின்டன் – டி – காக், ஹர்திக் பாண்டியாவை விரைவில் அவுட் எடுக்க திட்டம் வைத்துள்ளோம். அதை நாளை செயல்படுத்துவோம். நாளைய போட்டியில் வெற்றி பெற்று விட்டால் தொடர் தோல்விகளால் எங்கள் அணி மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்து விடலாம் என அவர் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.