இன்றைய போட்டியில் தோனியை பொளந்து கட்ட போகும் கொல்கத்தா வீரர் இவர்தான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று நடைபெறும் ஐ.பி.எல் 29வது லீக் போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றனர்.

கொல்கத்தா அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது.

முந்தைய போட்டியில் சென்னை அணியிடம் அடைந்த படு தோல்விக்கு இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சென்னை அணி ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடிய  கடைசி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக விளையாடாத சுனில் நரைன் இன்றைய போட்டியில் பங்கேற்கிறார். காயம் முழுமையாக குணமாகவிட்டாலும் போட்டியின் முக்கிய துவம் கருதி இன்றைய போட்டியில் பங்கேற்கிறார் நரைன்.

Sunil Narine

கடந்த 2018 ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 3 முறை கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதியுள்ளனர். இதில் சுனில் நரைனின் 18 பந்துகளை சந்தித்துள்ள ரெய்னா, வெறும் 13 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் இரண்டு முறை சுனில் நரைனிடம் அவுட்டாகி உள்ளார் சுரேஷ் ரெய்னா.

அதே போல் தோனி சுனில் நரைனுக்கு எதிராக மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் சுனில் நரைனுக்கு எதிராக மொத்தம்  57 பந்துகளை சந்தித்துள்ள தோனி  வெறும் 29 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். மேலும் இதில் 29 டாட் பால்களும், 1 பவுண்டரி மட்டுமே அடித்துள்ளார்.

இதனால் இன்றைய போட்டியில் தோனி மற்றும் சுனில் நரைனுக்கு எதிராக போட்டி சுவாரஷ்யமாக இருக்கும். அதே சமயம் தோனியை இன்றைய போட்டியில் அவுட்டாக நரைனை வைத்து புதிய திட்டம் தீட்டியுள்ளதாக கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளர் சைமன் கேடிச் பேட்டி அளித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.