இன்றைய போட்டியில் மீண்டும் களம் இறங்கும் முரளி விஜய்

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் அனுபவ வீரர் முரளி விஜயை அவரது அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி .

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விளையாடிய 7 போட்டியில் 6ல் வென்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. என்றாலும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இதுவரை ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடவில்லை.

முதல் சில போட்டிகளில் வாட்சன் மற்றும் ராயுடு ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்கப்பட்டனர். இருவரும் தொடர்ந்து சொதப்பபியதால், ராயுடு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாற்றப்பட்டார். அதே சமயம் பாப் டூ பிளசிஸ் மற்றும் வாட்சன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்கப்பட்டனர்.

தற்போது ராயுடு மற்றும் பாப் டூ பிளசில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் வாட்சன் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் பெரிய அளவு ரன்கள் ஏதும் அடிக்கவில்லை.

இதனால் இன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், ஷேன் வாட்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சென்னை அணிக்கு மீண்டும் முரளி விஜய் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய போட்டியில் முரளி விஜய் இடம் பெறுவார் என எதிர் பார்க்கலாம்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.