உலக கோப்பைக்கான தனது இந்திய அணியை அறிவித்தார் கம்பீர்

உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை, எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வு குழு நாளை அதிகாரப்yர்வமாக அறிவிக்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் உலக கோப்பைக்கான தனது அணியை அறிவித்துள்ளார்.

தனது உலகம் கோப்பைக்கான இந்திய அணியில் 4ம் வரிசை வீரராக அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்துள்ளார்.

அதே சமயம் இந்திய அணிக்கு மூன்றாவது தொடக்க ஆட்டக்காரராக கே.எல் ராகுலையும், இரண்டாவது விக்கட் கீப்பராக அனுபவ தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார்.

தனது அணிக்கு 4வது வேகப்பந்து வீச்சாளர் தேவையில்லை என முடிவெடுத்துள்ளார். அதற்கு மாற்றாக 3வது கழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் ரவி சந்திரன் அஸ்வினை தேர்வு செய்துள்ளார்.

தனது அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் மற்றும் ரிஷப் பண்டை கம்பீர் தேர்வு செய்யவில்லை. இதற்கு காரணமாக இருவருக்கும் அனுபவம் அதிகம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

கம்பீரின் உலக கோப்பை அணி:
ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, அம்பாத்தி ராயுடு, மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ், கே.எல் ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுகேந்திர சஹல், ரவி சந்திரன் அஸ்வின்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.