ரஸலை அவுட்டாக் தோனி சொன்ன சிறிய ரகசியம் இதுதான் – இம்ரான் தாஹிர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் அதிரடி தொடக்கம் தந்தார். ஒரு முனையில் நரைன், நிதிஷ் ரானா, உத்தப்பா என அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டானாலும், கிறிஸ் லின் சென்னை அணியின் பந்து வீச்சை பொளந்து கட்டினார்.

கிறிஸ் லின் 51 பந்தில் 82 ரன் எடுத்திருந்த போது இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் அவுட்டானர். இவரை தொடந்து வந்த ஆன்ரே ரஸல் முதல் 3 பந்தில் 1 பவுண்டரி , 1 சிக்சர் என 10 ரன்களை குவித்தார்.

இதனையடுத்து மைதானத்தில் ரசிகர்கள் ரஸல் ரஸல் என ஆரவாரம் செய்தனர். அப்போது தாஹிரின் அருகில் சென்று தோனி ஏதோ சொன்னர். இதனை தொடர்ந்து தாஹிர் வீசிய அடுத்த பந்திலே ரஸல் அவுட்டாகி வெளியேறினார்.

இதனால் கொல்கத்தா அணியால் 20 ஓவர் முடிவில் 161 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

தற்போது ரஸலை அவுட்டாக்க தோனி என்ன சொன்னார் என்பதை தாஹிர் வெளியிட்டுள்ளார்.

நான் முதலில் ரஸல் விக்கெட்டை எடுக்க விக்கெட் டு விக்கெட் பந்து வீசினேன். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. முதல் மூன்று பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்கரை அடித்தார் ரஸல்.

உடனே என் அருகில் வந்த தோனி பந்தை ஸ்டம்ப்புக்கு வீச வேண்டாம், ஆறாவது ஸ்டம்ப் லைனில் வீசு. சிக்ஸ் போனால் போகட்டும். பந்து சரியாக படவில்லை என்றால் நிச்சயம் கேட்ச் கிடைக்கும் என அறிவுறுத்தினார். நான் அதை அப்படியே செய்தேன். ரஸல் அடுத்த பந்திலே அவுட்டானார்.களத்தில் தோனியின் புத்தி கூர்மையை நினைத்து வியக்கிறேன் என தாஹிர் கூறியுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.