வெற்றிக்கு அவர் மட்டுமே காரணம் யாரும் அதை பங்கிட முடியாது – தோனி அதிரடி

புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களி இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்றைய லீக் போட்டியில் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது.

அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக  கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களம் இறங்கினர். நரைன் 2 ரன்னுக்கு அவுட்டாக, சிறிஸ் லின் அதிரடி காட்டினார். அவர் தீபக் சாஹர் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ஒலரை வெளுத்து வாங்கினார். குறிப்பாக ஜடேஜாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை தொடர்ந்து பறக்கவிட்டார். கிறிஸ் லின் தொடர்ந்து அதிரடியாய் ஆடினால் கொல்கத்தா அணி எளிதில் 200+ ரன்களை எடுக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால் கிறிஸ் லின் தாஹிரின் அடுத்த ஓவரிலே 82 ரன்கலில் அவுட்டானார். அதனை தொடர்ந்து நிதிஷ் ரானா (21), உத்தப்பா (0) மற்றும் ஆண்ரே ரஸல் (10) ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டாக்கினார். இதனால் கொல்கத்தா அணியால் 20 ஓவர் முடிவில் 161/8 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 81 ரன்களுக்கு 4 லிக்கெட்டுகளை இழந்து தவித்தது. மிகவும் எதிர்பார்த்த தோனி 16 ரன்களுக்கு அவுட்டானார். ஆனாலும் ரெய்னா 58 ரன்கள் மற்றும் ஜடேஜா 31 ரன்களை சேர்த்து, சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதன் மூலம் சென்னை அணி 7 வது வெற்றியை பதிவு செய்தது.

போட்டி முடிந்த பின் தோனி கூறியதாவது: எனக்கு முதுகில் நரம்பு பிடிப்பு ஏற்ப்பட்டது. தற்போது வலி கொஞ்சம் குறைவாக உள்ளது. இன்று கிறிஸ் லின் சிறப்பாக விளையாடினார். அவரது ஆட்டத்தை பார்த்த போது 190+ ரன்களை துரத்த போகிறோம் என்று நினைத்தோம். ஆனால் தாஹிர் சிறப்பாக பந்து வீசி கொல்கத்தாவின் விக்கெட்டுகளை சரித்தார். குறிப்பாக லின் மற்றும் ரஸலின் விக்கெட்டுகளை எடுத்தார். தாஹிர் சென்னை அணிக்கு கிடைத்த வரம். ஜடேஜா, ரெய்னா சிறப்பாக ஆடினாலும்  இன்றைய போட்டியின் வெற்றிக்கு தாஹிர் மட்டும் தான் காரணம் என தோனி தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.