2 பேட்ஸ்மேன் 4 பவுலர்கள் மற்றவர்கள் ஃபீல்டர்கள் – விஜய் சங்கர் ஆவேசம்

நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி இப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணியில் காலின் மன்ரோ 40, ஸ்ரேயாஷ் ஐயர் 45 ஆகிய இருவர் மட்டுமே பெரிய அளவு ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 155/7 என்ற கெளரவ ஸ்கோரை எட்டியது.

இலக்கு சிறியது என்பதாலும், இப்போட்டியில் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதாலும் ஹைராபாத் அணி எளிதில் வெற்றி பெறும் என நினைத்தனர்.

எதிர்பார்த்ததை போல் வார்னர் (51), மற்றும் பேர்ஸ்டோ (4 l) என சிறப்பாக விளையாடினர். இவர்களை தவிர மற்ற எவரும் இரட்டை இலக்க எண்ணை தொடவில்லை. மிகவும் எதிர்பார்த்த வில்லியம்சன் (3), விஜய் சங்கர் (1) ரன் மட்டுமே எடுத்தனர்.

இதனால் ஹைதராபாத் அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெல்லி அணியில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா 4, சீமோ பால் 3, கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணிக்கு இது முதல் முறை இல்லை. இதற்கு முன் மும்பை அணியிடம் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்துள்ளது. இப்போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து ஆவேசமாக பேசிய விஜய் சங்கர் கூறியதாவது.

எங்கள் அணியில் தொடர்ந்து 2 பேட்ஸ்மேன்கள் மட்டும் சிறப்பாக ஆடி வருகின்றனர். பந்து வீச்சாளர்கள் அவர்களது பணியை செம்மையாக செய்கின்றனர். அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. ஏதோ ஸ்கூல் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் வருகிறார்கள், அவுட்டாகி வெளியே சென்று விடுகிறார்கள். நான் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

இது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் என்றுமே வெற்றி பெற முடியாது. எங்கள் மீது எங்களுக்கே கோபம் வருகிறது. எங்கள் அணியில் 2 பேட்ஸ்மேன்கள், 4 பவுலர்கள் மட்டும் தான. அணியில் இருக்கும் மற்றவர்கள் எல்லாம் பந்தை எடுத்து போடும் ஃபீல்டர்கள் தான் என விஜய் சங்கர் கோபத்துடன் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.