இரண்டு மாபெரும் மாற்றங்களுடன் களம் இறங்கும் சென்னை அணி வெற்றி பெருமா ஹைதராபாத்

இன்று இரவு நடைபெற உள்ள 33வது ஐ.பி.எல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் மோதுகின்றன.

நடப்பு ஐ.பி.எல் தொடரை சிறப்பாக தொடங்கிய ஹைதராபாத் அணி அடுத்தடுத்த 3 தோல்விகளால் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் பின்தங்கி உள்ளது. அதே சமயம் சென்னை அணி 7 வெற்றிகளை பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

தொடர் தோல்விகளுக்கு முற்று புள்ளி வைக்க ஹைதராபாத் அணி பெரும் முயற்சி எடுக்கும் என்பதால் இன்றைய போட்டியை சென்னை அணி வெல்வது மிக கடினமாக இருக்கும். குறிப்பாக ஃபார்மில் இருக்கும் பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகியோரை விரைவில் அவுட்டாக்க வேண்டியது அவசியம்.

ஹைதராபாத் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி உள்ளனர். இதனால் இன்றைய சென்னை அணியில்  மோசமான ஃபார்மில் இருக்கும் ஷேன் வாட்சன் நீக்கப்பட்டு ஸ்காட் குகேஜிலின் சேர்க்கப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

அதே போல் நடப்பு தொடரில் இதுவரை சோபிக்காத கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு முரளி விஜய் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் சென்னை அணி: முரளி விஜய், பாப் டு பிளசிஸ், சுரேஷ் ரெய்னா அம்பாத்தி ராயுடு, தோனி, ரவீந்திர ஜடேஜா, ஸ்காட் குகேஜிலின், மிட்செல் சாண்ட்னர், திபக் சஹர், ஹர்துல் தாக்கூர், இம்ரான் தஹிர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.