பதவி விலக நான் தயாராக உள்ளேன் கங்குலி அதிரடி அறிவிப்பு

பி.சி.சி.ஐயின் விதிமுறைப்படி, பி.சி.சி.ஐ கட்டமைப்பின் கீழ், செயல்படும் அமைப்புகளில் இருக்கும் ஒருவர் இரு பதவிகளை வகிக்க முடியாது அப்படி வகித்தால் அது விதி மீறல். எனவே அவர் இரண்டு பதவியில் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தற்போது சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ கீழ் இயங்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசனை குழுவில் சச்சின் மற்றும் வி.வி.எஸ் லட்சுமனன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அவர் மேலும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராகவும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கங்குலி ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளின் மூலம் ஆதாயம் பெற்று வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை உச்சநீதிமன்றத்தால் பி.சி.சி.ஐ-யின் நன்னடத்தை அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் முதற்கட்டமாக விசாரிக்க தொடங்கியுள்ளார். இந்த புகார் குறித்து கங்குலி விளக்கமளிக்க ஏப்ரல் 20ந் தேதி கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளார் டி.கே ஜெயின்.

தற்போது இரட்டை பதவி விவாகரம் குறித்து கங்குலி தெரிவித்திருப்பதாவது, இரட்டை பதவி விவகார சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்க தான் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் (CAC) இருந்து பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.