மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்

நடப்பு ஐ.பி.எல் தொடர் தொடங்கும் முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே குதி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

இதனையடுத்து அவருக்கு மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப்பை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.

அல்சாரி ஜோசப் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில், 3.4 ஒவர்கள் வீசி 12 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது, பவுண்டரி லைனில் பந்தை தடுக்க முயற்சி செய்த அல்சாரி ஜோசப்புக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இந்த காயம் குணமடைய ஒரு மாத காலம் ஆகும் என்பதால், அல்சாரி ஜோசப் மீதமுள்ள ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது. அல்சாரி ஜோசப்புக்கான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.