அதற்கு தோனி மட்டும் தான் காரணம் போட்டுடைத்த ரஷீத் கான்

நேற்று முன்தினம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை அணி.

இப்போட்டியில் சென்னை அணிக்கு ஷேன் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் நல்ல தொடக்கம் தந்தனர். இதனை சரியாக பயன்படுத்தி கொள்ளாத மற்ற பேட்ஸ்மேன்கள் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் ரன்களை குவிக்க தவறினர். இந்த இடத்தில் தோனியின் அவசியத்தை உணர்ந்தது சென்னை அணி.

இப்போட்டியில் முதுகில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக தோனி பங்கேற்கவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சுரேஷ் ரெய்னா வழி நடத்தி சென்றார்.

இந்நிலையில் இன்று ரஷீத் கான் அளித்த பேட்டியில் சென்னை அணி தோற்றதற்கு தோனி இல்லாதது தான் காரணம் என தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.,

இந்தாண்டு சிறப்பாக ஆடி வரும் சென்னை அணியை வீழ்த்தியதால் நாங்கள் மிகவும் மகிழ்சியாக உள்ளோம். கடந்த ஒரு ஆண்டாக தோனி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். ஃபினிசராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

மிடில் ஓவரில் தோனி நிதானம் காட்டினாலும், டெத் ஓவர்களில் அதிரடியாய் ஆடி 170 ரன்கள் வரை சேர்த்து விடுகிறார். நேற்றைய ட்டியில் தோனி இல்லாததால் அந்த அணியால் டெத் ஓவர்களில் ரன்களை குவிக்க முடியவில்லை.

தோனி அணியில் இல்லாதது எங்களுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது. அதனால் தான் போட்டியை மிக எளிதில் வெற்றி பெற முடிந்தது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.