அவரை மட்டும் நீக்க மாட்டேன் திட்டவட்டமாக தெரிவித்த தோனி

நடப்பு ஐ பி.எல் தொடரில் சென்னை அணி வயதான அணி என கிண்டல் செய்யப்பட்டாலும், நடைபெற்ற 9 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த ஆண்டு சென்னை அணிக்காக 2 சதம் உட்பட 555 ரன்களை குவித்தார் வாட்சன். ஆனால் இந்தாண்டு ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதுவரை 9 போட்டிகளில் 142 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

வாட்சன் தொடர்ந்து மோசமாக ஆடி வருவதால், தமிழக வீரர் முரளி விஜயை தொடக்க ஆட்டக்காரர் களம் இறக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனால் இதுவரை சென்னை அணியில் முரளி விஜய் களம் இறக்கப்படவில்லை.

இந்நிலையில், முரளி விஜய் குறித்த இந்த கேள்விக்கு தோனி பேட்டி ஒன்றில் இன்று கூறியதாவது., வாட்சன் சென்னை அணிக்காக கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடி உள்ளார். இந்தாண்டு சென்னை விளையாடிய மைதானங்கள் அனைத்தும் அதிகம் திரும்பக் கூடியவை. இது போன்ற மைதானங்களில் விளையாடுவது மிக கடினம். இது போன்ற மைதானங்களை வைத்து வாட்சனின் திறனை எடை போட முடியாது.

தற்போது சென்னை அணி தொடர்ந்து வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அணியின் கலவையை மாற்றுவது தோல்வியை பெற்று தரலாம். எனவே தற்போது வாட்சனை நீக்கி முரளி விஜயை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கும் எண்ணமில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், முரளி விஜயை சென்னை அணிக்கு ஏலத்தில் எடுத்ததற்கு காரணமே பேக் அப் வீரராக தான். தொடக்க ஆட்டக்காரர்களுக்கு காயம் ஏற்பட்டால் தான் அவரை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.