நான் பவர் ஹிட்டிங் சிறப்பாக ஆடுவதற்கு இது மட்டும் தான் காரணம் ஹர்திக் பாண்டியா பேட்டி

நேற்று இரவு கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணி முதலில் பேட் செய்தது.

குவின்டன் டிகாக் (35), ரோகித் சர்மா (30) நல்ல தொடக்கம் தந்து அவுட்டாகினர். இதனையடுத்து வந்த மும்பை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடினர். இதனால் மும்பை அணியின் ரன்ரேட் சரிந்தது.

சூர்ய குமார் யாதவ் விக்கெட்டை தொடர்ந்து ஃபினிசராக களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர்களில் அதிரடி காட்டினார். டெல்லி அணியின் மோரிஸ் மற்றும் ரபாடா பந்து வீச்சை துவம்சம் செய்தார். பாண்டியா 15 பந்தில் 32 ரன்கலை குவிக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 168/5 ரன்களை குலித்தது.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 128/9 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1 விக்கெட் மற்றும் 32 ரன்களை குவித்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டி முடிந்த பின் தனது பவர் ஹிட்டிங் பற்றி ஹர்திக் பாண்டியா கூறியதாவது., நான் வலை பயிற்சியில் மிகவும் கடுமையாக உழைக்கிறேன். தவறுகளை திருத்தி கொள்கிறேன். அதன் பலனை மைதானத்தில் அனுபவிக்கிறேன். நான் பேட்டிங்கின் போது அடிப்படை விஷயங்களை சரியாக செய்கிறேன். டெத் ஓவரில் உடலை நல்ல வடிவத்தில் வைத்து கொள்கிறேன். அதனால் பந்து வீச்சாளர்கள் தவறு செய்யும் போது பந்தை பவர் ஹிட் செய்ய முடிகிறது. இத் தொடர் முழுவதும் இந்த ஃபார்மை தொடர விரும்புகிறேன் என பாண்டியா கூறினார்

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.