நான் பேட்டிங் தேர்வு செய்ததன் பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான் ரோகித் சர்மா

நேற்றைய ஐ.பி.எல் லீக் போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை தனது சொந்த மைதானம் பெர்ரோ ஷா கோட்லாவில் எதிர் கொண்டது டெல்லி கேபிடல்ஸ் அணி .

இப்போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு எடுத்தார். இதனை பார்த்த ஷ்ரேயாஷ் ஐயர் ரோகித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வியப்பளிக்கிறது. சந்தோசம் நாங்கள் டாஸை வென்றிருந்தால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருப்போம் என்றார்.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா(30), டி-காக் (35), ஹர்திக் (32), க்ருணால் (37) ரன்களை எடுக்க, 20 ஓவர் முடிவில் அந்த அணி 168 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது மும்பை அணி .

போட்டி முடிந்த பின் டாஸ் குறித்து பேசிய ரோகித் கூறியதாவது., ஆஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போதே தெரிந்து விட்டது, கோட்லா மைதானத்தில் இரண்டாவதாக பேட் செய்வது மிகவும் கடினம் என்று. இதனை மனதில் கொண்டு தான் இன்று டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்தேன். மேலும் இதற்கு முன் இந்த மைதானத்தில் நடந்த சில போட்டிகளிலும் இரண்டாவதாக பேட் செய்ய அணிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். இதையும் மனதில் கொண்டு தான் பேட்டிங்கை தேர்வு செய்தேன் என அவர் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.