பாண்டியாவின் ஹெலிகாப்டர் ஷாட் பற்றி தோனி சொன்ன அந்த ஒரு வார்த்தை அசந்து போன ஹர்திக் பாண்டியா

இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஃபினிசர் ரோலில் சிறப்பாக ஆடி வருகிறார் ஹந்திக் பாண்டியா. நடப்பு ஐ பி எல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டியா 218 ரன்களை குவித்துள்ளார்.

இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் ஹர்திக் பாண்டியா தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவதை அடிக்கடி பார்க்க முடிகிறது.

நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் 32 ரன்களை குவித்தார் பாண்டியா. இதில் ரபாடா ஓவரில் ஹெலிகாப்டர் ஷாட்டின் மூலம் ஒரு சிக்சனர பறக்க விட்டார் பாண்டியா. இதே போல் சி.எஸ்.கே அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போட்டியிலும் ஹெலிகாப்டர் ஷாட்டின் மூலம் சிக்கர் அடித்தார் பாண்டியா.

இந்நிலையின் தனது ஹெலிகாப்டர் ஷாட் குறித்து தோனி என்ன சொன்னார் என்பதை ஹர்திக் பாண்டியா தற்போது கூறியுள்ளார்.

நான் முதலில் ஹெலிகாப்டர் ஷாட் ஆட முடியும் என நினைக்கவில்லை. நெட்ஸில் அதிக முறை பயிற்சி எடுத்தேன். சி.எஸ்.கேள் கதிரான போட்டியில் ஹெலிகாப்டர் ஷாட் ஆடினேன். போட்டி முடிந்தவுடன் தோனியை அவரது ஓய்வறையில் சென்று பார்த்தேன். எனது ஹெலிகாப்டர் ஷாட் எப்படி இருந்தது என கேட்டேன். அதற்கு அவர் (Good) சிறப்பாக இருந்தது nன ஒரே வார்த்தையில் பதிலளித்தார். அப்போது மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன் என்றார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.