இன்றைய போட்டியில் அவருக்கு மட்டும் தான் ஸ்கெட்ச் ரோகித் சர்மா அதிரடி பேட்டி

இன்று மாலை நடைபெற உள்ள லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதன் கோட்டைக்கே சென்று எதிர்கொள்ள உள்ளது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விடாமல் இருக்க இன்றைய போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டும். ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லரை தவிர மற்ற வீரர்கள் யாரும் இதுவரை தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

அதே சமயம் மும்பை அணியில் பேட்டிங், பவுலிங் பீல்டிங் என அனைத்து பிரிவிலும் வலுவாக உள்ளனர். ஆனால் ராஜஸ்தான் அப்படி இல்லை பட்லர் அடித்தால் மட்டுமே வெற்றி என்று உள்ளது.

இரு அணிகளும் முந்தைய போட்டியில் சந்தித்த போது ஜாஸ் பட்லர் 43 பந்தில் 89 ரன்களை அடித்து மும்பை அணியிடம் இருந்து வெற்றியை பறித்தார். இந்நிலையில் இன்றைய போட்டி குறித்து ரோகித் சர்மா கூறியதாவது.

இன்றைய போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்தையும், பிளே ஆஃப் சுற்றையும் உறுதி செய்து விடுவோம். எந்த அணியையும் அதன் சொந்த மண்ணில் எதிர் கொள்வது மிக கடினம். அப்படி தான் ராஜஸ்தான் அணியும்.

சென்ற முறை பட்லர் எங்கள் வெற்றியை பறித்து விட்டார். இந்த முறை அப்படி நடக்க விடமாட்டேன். பட்லரை விரைவாக அவுட்டாக்க ராகுல் சஹர் மற்றும் பும்ராவை வைத்து புதிய திட்டம் தீட்டி உள்ளோம். அதை செயல்படுத்துவோம். பாண்டியா சகோதரர்களின் ஃபார்ம் எங்கள் அணிக்கு கூடுதல் பலம் தருகிறது என பேட்டியில் அவர் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.