அஸ்வினுக்கு அபராதம் விதித்து பி.சி.சி.ஐ அதிரடி உத்தரவு

நேற்று இரவு ஃபெர்ரோ ஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல் வழக்கம் போல் அதிரடி காட்டினார். அவர் 37 பந்தில் 69 ரன்களை குவித்து அவுட்டானர். அவரை தவிர மற்ற வீரர்கள் டெல்லி அணியின் துல்லிய பந்து வீச்சில் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். இதனால் பஞ்சாப் அணியால் 20 ஓவர் முடிவில் 163 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா I3 ரன்களுக்கு அவுட்டாக, இதன் பின் ஜோடி சேர்ந்த தவான் மற்றும் ஷ்ரேயாஷ் ஐயர் ஜோடி நிதனமாய் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். தவான் (56), ஐயர் (58*) ரன்களை எடுத்தனர். டெல்லி அணி 19.4 ஓவரில் 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பஞ்சாப் அணி வீரர்கள் 20 ஓலர்கள் பந்து வீசி முடிக்க குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்து கொண்டிதால், அந்த அணியின் கேப்டன் ரவி அஸ்வினுக்கு ரூ 12 லட்சம் அபராதம் லிதித்துள்ளது பி.சி.சி.ஐ.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.