தோனி இல்லாமல் அதை நினைத்து கூட பார்க்க முடியாது ஸ்டீபன் பிளெமிங் பேட்டி

இன்று இரவு பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை அணி விளையாடிய முந்தைய போட்டியில் முதுகில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக தோனி பங்கேற்கவில்லை. இதனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியை ரெய்னா கேப்டனாக வழிநடத்தினார். இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் தோனியின் முக்கியத்துவம் பற்றி சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

Dhoni

தோனி சென்னை அணியில் இருப்பது எங்களுக்கு மிகப் பெரிய பலம். தோனி ஒரு போட்டியில் விளையாடவில்லை என்றால், அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தோனி இல்லாமல் சென்னை அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம். ஏன் வெற்றியை நினைத்து கூட பார்க்க முடியாது.

தோனி தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார். கேப்டன்சியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நேற்றும் இன்றும் தோனி வலை பயிற்சி மேற்கொண்டார். எந்த வித பிரச்சனையும் இல்லை முழு உடல் நலத்துடன் இருக்கிறார். இன்றைய போட்டியில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் போட்டி தொடங்கும் முன் தான் அவர் பங்கேற்பதை உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.