ரகானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு இதுதான் காரணம் – பேட்டியளித்த ஸுபின் ஃபாருசா

0
272

நடப்பு ஐ.பி.எல் தொடரில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. விளையாடிய 8 போட்டிகளில் 6ல் தோற்று, இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் பின் தங்கியுள்ளது.

சில போட்டிகளில் ராஜஸ்தான் அணி வெற்றிக்க மிக அருகில் சென்றாலும், ரகானேவால் தனது கேப்டன்சி மூலம் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. இதனால் தற்போது ராஜஸ்தான் அணி மீதமுள்ள 6 போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இதனால் இன்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் ரகானே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்டீவ் ஸ்மித் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அடுத்து நடைபெறும் போட்டிகளிலும் ஸ்மித் கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் ராயல் அணி தலைவர் ஸுபின் ஃபாருசா கூறியதாவது., அஜங்கியா ரகானே ராஜஸ்தான் அணிக்காக உண்மையாக உழைத்து வருகிறார். கடந்த ஆண்டு அணியை சிறப்பாக வழிநடத்தி பிளே ஆஃப் வரை அழைத்து சென்றார். ஆனால் இந்தாண்டு அவர் தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ராஜஸ்தான் அணி வெற்றி பெற சில மாற்றங்கள் அணியில் தேவைப்படுகிறது.

தொடர் தோல்விகள் தான் ரகானேவிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்துள்ளது. ஸ்டீல் ஸ்மித் உலக அளவில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சிறந்த கேப்டன். அவர் அணிக்கு வெற்றியை பெற்று தருவார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.