அசத்தல் ஐ.பி.எல் வரலாற்றில் இந்த சாதனையை செய்யும் முதல் இந்தியர் தோனி தான்

நேற்று பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இதன் மூலம் முந்தைய போட்டியில் சென்னை அணியிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துள்ளது பெங்களுர் அணி.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களுர் அணிக்கு விராட் கோலி மற்றும் டி-வில்லிபர்ஸ் ஆகியோர் எதிர் பார்த்த அளவு ரன்களை குவிக்கவில்லை. இருந்தாலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாந்திவ் படேல் 53 ரன்களும், மொயீம் அலி 26 ரன்களை குவிக்க.அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் குழப்புக்கு 161 ரன்களை எட்டியது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தோனியை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓலரில் சென்னை வெற்றி பெற 25 ரன்கள் தேவைப்பட, சென்னை அணியால் 24 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 1 வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் தோனி தனி ஆளாய் 48 பந்தில் 84 ரன்களை குவித்தார். இதில் 4 பவுண்டரி oட்டும் 7 சிக்சர்கள் அடங்கும். இப்போட்டியில் தோனி 4வது சிக்சர் அடித்த போது ஐ.பி.எல் வரலாற்றில் 200 சிக்சர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும், மேலும் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் 323 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் முதல் இடத்திலும், 204 சிக்சர்களுடன் டி-வில்லியர்ஸ் இரண்டாவது இடத்திலும், 203 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதன் பின் ரெய்னா 190 சிக்சர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.