அவர் மரண பயத்தை காட்டிட்டார் விராட் கோலி பரபரப்பு பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களுர் அணிக்கு பார்த்திவ் பட்டேல் 53, மொயீன் அலி 26, டி-வில்லியர்ஸ் 25 ரன்கள் எடுக்க, 20 ஓவரில் 161 ரன்களை எடுத்தது அந்த அணி. சென்னை அணி சார்பில் தீபக் சஹர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். குறிப்பாக பவர் பிளே முடிவதற்குள் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தனர். இதன் பின் ராயுடு மற்றும் தோனி இணைந்து 5வது விக்கெட்டுக்கு 55 ரன்களை சேர்த்தனர். ராயுடு 29 ரன்களுக்கு அவுட்டாகினார். இதனை தொடர்ந்து அதிரடி காட்டினார் தோனி.

BCCI/Sportzpics

கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 25 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் பெங்களுர் அணி வெற்றி பெற்று விடும் என நினைத்த போது, உமேஷ் யாதவ்வின் கடைசி ஓவரில் ஷாக் கொடுத்தார் தோனி. கடைசி ஓவரின் முதல் 5 பந்தில் 3 சிக்சர், 1 பவுண்டரி, ஒரு இரண்டு என 24 ரன்களை சேர்த்தார் தோனி.

வெற்றிக்காக கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே தேவைப்பட பெங்களுர் மைதாமைே பரபரப்பானது. உமேஷ் யாதவ் வீசிய அந்த கடைசி பந்தை தோனி மிஸ் செய்தார். பந்து விக்கெட் கீப்பர் பாத்திவ் பட்டேலிடம் சென்றது. அவர் சென்னை வீரர் சர்தூர் தாக்கூரை டைரக்ட் ஹிட் மூலம் ரன் அவுட் செய்தார். இதனால் 1 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 48 பந்தில் 84 ரன்களை குவித்தார் தோனி. இதில் 5 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்களை விளாசினார்.

போட்டி முடிந்த பின் விராட் கோலி அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது., போட்டியின் பிற்பாதியில் ஈரப்பதம் (Dew) வந்துவிடும் என்பதால் 160 வெற்றிக்கான இலக்கு என நினைத்தோம். எங்கள் பவுலர்கள் 19 வது ஓவர் வரை சிறப்பாக செயல்பட்டனர். தோனி கடைசி ஓவரில் 24 ரன்களை குவித்து எங்களுக்கு மரண பயத்தை காட்டிவிட்டார். இருந்தாலும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டோம். ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.