அதற்காக நான் காத்திருக்கிறேன் சுரேஷ் ரெய்னா பரபரப்பு பேட்டி

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது சென்னை அணி. மேலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தையும், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் நடக்க இருக்கும் போட்டியில், சென்னை அணி அதன் பரம விரோதியான மும்பை இந்தியன்ஸ் அணியை தனது சொந்த மைதானத்தில் எதிர் கொள்கிறது.

இவ்விரு அணிகளும் முந்தைய போட்டியில் மோதிய போது, சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்நிலையில் இப்போட்டி குறித்து சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா இன்று பேட்டியில் கூறியதாவது., என்னை பொறுத்த வரை மும்பை அணி எப்போதும் வலுவான அணி தான். தற்போது அந்த அணியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சம நிலையில் உள்ளது. அந்த அணியில் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா அபாயகரமான வீரர்களாக உள்ளனர்.

அந்த அணியில் ரோகித் சர்மாவின் விக்கெட்டை விரைவில் எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றக் கூடியவர். மும்பைக்கு எதிரான முந்தைய போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறோம். அது போன்று இப்போட்டியில் நடக்காது. தற்போது சென்னை அணியின் பேட்டிங் ஓரளவு செட் ஆகி விட்டது. இம்முறை நிச்சயம் வெற்றி பெறுவோம். நாளை மறுநாள் நடக்க இருக்கும் போட்டிக்காக நான் காந்திருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.