போட்டி முடிந்த பின் உருக்கமாக பேசிய வாட்சன் தோனி பிளெமிங்கிற்கு எப்படி நன்றி கூறுவேன்

நேற்று இரவு நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொண்டது புவனேஷ்குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பர் சிங்ஸ் அணி.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு வார்னர்(57), பாண்டே (83) ரன்களை எடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 175 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் ஷேன் வாட்சன். அவர் சந்தீப் சர்மா மற்றும் ரஷீத் கான் ஓவர்களை அடித்து துவம்சம் செய்தார். வாட்சன் 53 பந்தில் 96 ரன்களை குவித்து புவனேஷ்வர் குமார் பந்தில் அவுட்டானார். வாட்சன் தனது இன்னிங்சில் 6 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகளை விளாசினார். இதனால் சென்னை அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டி முடிந்த பின் பேசிய வாட்சன் கூறியதாவது. நான் இந்தாண்டு நடைபெற்ற பாகிஸ்தான் பிரிமியர் லீக் மற்றும் பிக் பாஷ் லீக்கில் சிறப்பாக ஆடினேன். ஆனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை நான் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. நான் உலகம் முழுவதும் நிறைய அணிகளுக்காக விளையாடி இருக்கிறேன். வேறு எந்த அணியாக இருந்திருந்தாலும் என்னை அணியில் இருந்து நீக்கியிருப்பார்கள். ஆனால் தோனி, பிளெமிங் மற்றும் அணி நிர்வாகம் என் மீது அதிக நம்பிக்கை வைத்தனர். அதிக வாய்ப்புகளை தந்தனர். தோனி மற்றும் பிளெமிங் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என வாட்சன் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.