வாட்சனை நீக்காதது இதனால் தான் ரகசியத்தை நொடியில் உடைத்த தோனி

தொடர் இரு தோல்விகளுக்கு பின் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தனது சொந்த மண்ணில் எதிர் கொண்டது சென்னை சூப்பர் அணி.

இப்போட்டியில் முதலில் பேட் செய்தது ஹைதராபாத் அணி. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜானி பேர்ஸ்டோ டக் அவுட் ஆகினார். இதனையடுத்து இணைந்த டேவிட் வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் நிலையாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதானமாக ஆடிய வார்னர் 57 ரன்களும், அதிரடியாய் ஆடிய பாண்டே 83 ரன்களை அடித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 175/3 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணிக்கு பாப் டு பிளசீஸ் 1 ரன்னில் அவுட்டானார். இதனையடுத்து இணைந்த வாட்சன் ரெய்னா ஜோடி, ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ரெய்னா 38 ரன்னிலும், வாட்சன் 96 ரன்னிலும் அவுட்டாகினர். இவர்களது ஆட்டத்தால் 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடதிற்கு முன்னேறியது சென்னை அணி.

போட்டி முடிந்த பின் பேட்டியளித்த தோனி வாட்சன் குறித்து பேசியதாவது., வாட்சன் எங்கள் அணியின் மேட்ச் வின்னர். வாட்சன் வலை பயிற்சியில் பந்தை அருமையாக ஆடுகிறார். அதே போல் ஒவ்வொரு போட்டியிலும் சிறிய இன்னிங்ஸ் ஆடினாலும் பந்தை நடு மட்டையில் அடித்து ஆடினார் வாட்சன். முதல் 10 போட்டிகளில் ரன் குவிக்க தவறினார். இது போன்ற கஷ்டமான நேரங்களில் தான் ஓர் அணியாக அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அணி நிர்வாகம் வாட்சனின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து எவ்வளவு வாய்ப்பு தர முடியுமோ அவ்வளவு அதிக வாய்ப்புகளை தர நினைத்தது. அதற்கேற்றார் போல் சென்னை அணியின் தொடர் வெற்றிகளும் வாட்சனுக்கு அதிக வாய்ப்புகளை பெற்று தந்தது என தோனி கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.