கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம்? காலிஸ் பரபரப்பு பேட்டி

நடப்பு ஐ.பி.எல் தொடரை தொடர் வெற்றிகள் மூலம் தொடங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணி முதல் 5 போட்டிகளில் டெல்லி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் தோல்வியடைந்து. இந்த போட்டியையும் சூப்பர் ஓவர் வரை எடுத்து சென்று தான் தோல்வி அடைந்தது அந்த அணி.

தொடக்கத்தில் எதிரணி எவ்வளவு பெரிய டார்கெட்டை செட் செய்தாலும், அதை ஆண்ரே ரஸல் எனும் ஒரு பவர் ஹிட்டர் மூலம் எளிதில் சேஸ் செய்தது. இதனால் புள்ளி பட்டியலில் டாப்பில் இருந்தது அந்த அணி.

ஆனால் அடுத்த 5 போட்டிகளில் கொல்கத்தா அணியின் நிலைமை தலைகீழாய் மாறியது. தொடக்கத்தில் மிடில் ஆர்டர் சொதப்பல், பவுலர்கள் அதிக ரன்களை வாரி வழங்குவது போன்றவை சிறு பிரச்சனைகளாக அந்த அணிக்கு இருந்தது. ஆனால் அவை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. விளைவு தொடர்ந்து 5 போட்டிகளில் படு தோல்வி.

முதல் 5 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியாக விளையாடிய அந்த அணி, கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியாக மாறியது. தற்போது புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் அந்த அணிக்கு நெட் ரன் கேரட்டிலும் சரிவு ஏற்ப்பட்டுள்ளது.

அதனால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்து வரும் நான்கு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் தற்போதைய கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, புதிய கேப்டனை அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜாக் காலிஸ் பேட்டியளித்துள்ளார்., எங்கள் அணி தொடர்ந்து சில போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதனால் எங்கள் வீரர்கள் சிலர் மன சோர்வில் உள்ளனர். எனவே அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் விதமாக சிலருக்கு மட்டும் ( தினேஷ் கார்த்திக், ராபி உத்தப்பா, நிகில் சங்கர், கிருஷ்ணா) சிறு ஒய்வு அளித்துளோம். அவர்களும் இன்றைய போட்டியில் அணியுடன் வந்து சேர்ந்து வாடுவார்கள். மற்றபடி கேப்டன் மாற்றம் குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கே கேப்டனாக கொல்கத்தா அணிக்கு இருப்பார் என அவர் தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.