தொடர் வெற்றிகளுக்கு காரணம் இதுதான் டிவில்லியர்ஸ் அதிரடி பேட்டி

நேற்று இரவு நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர் கொண்டது சிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இப்போட்டியில் பெங்களுர் அணி 17 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் களம் இறங்கிய பெங்களுர் அணிக்கு விராட் கோலி 13 ரன்னில் அவுட்டாக, பார்த்திவ் பட்டேல் அதிரடி தொடக்கம் தந்தார். இதனால் அந்த அணி முதல் 6 ஓவரில் 70 ரன்களை குவித்தது. பாத்திவ் பட்டேல் 24 பந்தில் 43 ரன்களை குவித்து அவுட்டானார்.

பவர் பிளே முடிந்த பின்னர் குறுகிய இடைவெளியில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது பெங்களுர் அணி. இதனால் டிவில்லியர்ஸ் மற்றும் மர்க்கஸ் ஸ்டாய்னிஸ் நிதான ஆட்டம் ஆட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் பெங்களுர் அணி 17 ஓவரில் 138 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் கடைசி 3 ஓவரில் நிதானம் காட்டிய டிவில்லியர்ஸ் மற்றும் ஸ்டாய்னிஷ் ருத்ர தாண்டவம் ஆடினர். ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி லைனுக்கு வெளியே பறக்க விட்டனர். குறிப்பாக ஷமியின் ஒரு ஓவரில் பந்தை மைதானத்தின் கூரைக்கு மேல் அனுப்பினார் டிவில்லியர்ஸ்.

கடைசி 3 ஓவரில் மட்டும் 64 ரன்களை குவித்தது பெங்களுர் அணி. இதனால் அணியின் ஸ்கோர் 202 ரன்களை எட்டியது. டிவில்லியர்ஸ் 82, ஸ்டாய்னிஸ் 46 ரன்னில் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணியில் மிகவும் எதிர்பார்த்த கெய்ல் 23 ரன்கள், கே.எல் ராகுல் 42 ரன்களில் அவுட்டாகினர். அந்த அணியில் எந்த வீரரும் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால் அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 185 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களுர் அணி. இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் சுற்றின் வாய்ப்பை தக்க வைத்துள்ளது பெங்களுர் அணி.

போட்டி முடிந்த பின் தனது ஆட்டம் குறித்து பேசிய டிவில்லியர்ல் கூறியதாவது., இப்போட்டியில் எனது விக்கெட் எவ்வளவு முக்கியம் என எனக்கு தெரியும். அதனால் முதலில் நிதானமாக ஆடலாம். கடைசி ஓவர்களில் அடித்து ஆடலாம் என முடிவு எடுத்தேன். எப்போதும் கடைசி ஓவரில் அடித்து ஆடுவது எளிதல்ல. முதலில் வெற்றி பெற 160 ரன்கள் மட்டும் போதும் என நினைத்தேன். போட்டியின் இரண்டாம் பாதியில் எளிதாக பேட் செய்ய முடிந்தது. அதனால் தான் 20 ரன்களை தொட முடிந்தது.

எங்களது பவுலர்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதலில் தொடர் தோல்விகளை எங்கள் அணி சந்தித்தாலும், தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியது சந்தோஷம் தருகிறது. தற்போது ஓர் அணியாக இணைந்து செயல்படுகிறோம் அதனால் தான் தொடர் வெற்றிகள் எங்களுக்கு கிடைத்துள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.