ஐ.பி.எல்-ஐ வைத்து எடை போடாதீர்கள் அவர் மிகவும் அபாயகரமான வீரர் எச்சரிக்கும் ஹர்பஜன் சிங்

உலகில் நம்பர் 1 ரிஸ்ட் ஸ்பின்னராக இருக்கும் குல்தீப் யாதவ் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஃபார்ம் அவுட் ஆகி தவிக்கிறார். தொடர்ந்து அதிக ரன்களை வாரி வழங்கியும், விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த பெங்களுர் அணிக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவின் ஒரே ஓவரில் 27 ரன்களை குவித்தார் மொயீம் அலி. இதனால் மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார் குல்தீப்.

அவரது மோசமான ஃபார்மை பார்த்த கொல்கத்தா அணி கடைசி 2 போட்டிகளில் குல்தீப் யாதவை அணியில் சேர்க்கவில்லை. இந்த ஆண்டு 9 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். எகனாமி ரேட் 8.68 வைத்துள்ளார்.

ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் உலக கோப்பை போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் குல்தீப் யாதவ் ஃபார்ம் அவுட்டில் இருப்பது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் குல்தீப் யாதவை ஐ.பி.எல் போட்டிகளை வைத்து அவரை எடை போட வேண்டாம் என இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். அவர் கூறியதாவது.,

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் ஒரே மாதிரியானவை அல்ல. டி20 போட்டிகள் எந்த ஒரு பெரிய வீரரும் சில சமயம் சறுக்கலை உண்டாக்கும். ஐ.பி.எல் – இல் குல்தீப் பந்து வீச்சை அதிகம் அடித்து ஆடுபவர்கள் இந்தியர்கள். உலக கோப்பை போட்டிகளில் குல்தீப் யாதவ் வெளி நாட்டு வீரர்களுக்கு பந்து வீசப் போகிறார். ஐ.பி.எல் போட்டிகளை வைத்து அவரை எடை போடாதீர்கள். உலக கோப்பை போட்டியில் குல்தீப் அபாயகரமான வீரராக இருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.