ஓய்வை அறிவித்தார் சென்னை அணியின் மிக முக்கிய வீரர் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஷேன் வாட்சன். முதல் 10 போட்டிகளில் 147 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் வாட்சன்.

ஆனால் கடைசியாக விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்களை குவித்து மீண்டும் ஃபார்முக்கு வந்தார் வாட்சன்.

இந்நிலையில் ஆஸ்ரேலியாவில் நடைபெறும் டி20 தொடரான பிக் பாஷ் லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக வாட்சன் அறிவித்துள்ளார்.

வாட்சன் கடந்த 4 ஆண்டுகளாக சிட்டி தண்டர்ஸ் அணிக்காக கேப்டனாக விளையாடி வந்தார். நான்கு ஆண்டுகளில் 1014 ரன்களையும், 19 விக்கெட்டுகளையும் அந்த அணிக்காக வீழ்த்தி உள்ளார். 2016ம் ஆண்டு அந்த அணிக்கு பிக் பாஷ் கோப்பையை வென்று தந்துள்ளார்.

ஓய்வு குறித்து அவர் கூறியதாவது., சிட்னி தண்டர் அணியில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் நிக் கம்மின்ஸ, பேடி அப்டன், லீ ஜெர்மான், ஷேன் பாண்ட் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கிறேன். அந்த அணி எனக்கு ஏராளமான நல்ல நினைவுகளை தந்துள்ளது. அந்த அணியில் விளையாடியதற்காக பெருமைபடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.