கதிகலங்கி நிற்கும் சி.எஸ்.கே மும்பை அணியில் இடம் பெறும் அதிரடி இடக்கை வீரர் யுவ்ராஜ் சிங்

இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இரண்டாவது முறையாக மோத உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இதற்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய போது 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது மும்பை அணி.

மும்பை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி ஆறில் வெற்றியையும், நான்கில் தோல்வியையும் அடைந்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்கு குவிண்டன் டி காக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 10 போட்டிகளில் டிகாக் 378 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 241 ரன்களை அடித்துள்ளனர்.

தொடர்ந்து அந்த அணிக்கு மிடில் ஆர்டர் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில், எஸ்.ஆர்.ஹெச் அணியுடன் 25 பந்தில் 21 ரன், ஆர்.சி.பி அணியுடன் 29 பந்தில் 29 ரன், எஸ்.ஆர்.ஹெச் அணியுடன் 21 பந்தில் 25 ரன், கே.கே.ஆர் அணியுடன் 11 பந்தில் 5 ரன் மட்டுமே எடுத்துள்ளார்.

Yuvraj singh

இதனால் இன்றைய போட்டியில் மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த சூர்ய் குமார் யாதவ் நீக்கப்பட்டு, யுவ்ராஜ் சிங் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எதிர்பார்க்கப்படும் மும்பை அணி: ரோகித் ஷர்மா, குவிண்டன் டி காக், யுவ்ராஜ் சிங், க்ருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, கைரான் பொல்லார்ட், மயங்க் மார்கண்டே, ராகுல் சஹர், பென் கட்டிங், லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.