தோனியால் பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் மும்பை அணி அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்

சி.எஸ்.கே அணியை தவிர மற்ற அணிகளுக்கு இனி நடைபெற உள்ள ஒவ்வொரு ஐ.பி.எல் லீக் போட்டியும் ஏறக்குறைய நாக் அவுட் போட்டி தான். எந்த அணி அடுத்து வரும் போட்டிகளில் தோல்வி அடைகிறதோ அந்த அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கேள்வி குறிதான்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளை தவிர மற்ற அணிகள் அனைத்தும் 11போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணி மட்டும் தான் 8 வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் டெல்லி அணி இனி வரும் 3 போட்டியில் ஒன்றை வென்றால் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும்.

ஆனால் மூன்றாம் இடத்தில் இருக்கும் மும்பை அணி இனி வரும் நான்கு போட்டிகளில் இரண்டை கட்டாயம் வென்றே தீர வேண்டும். அந்த நான்கு போட்டிகளில் கொல்கத்தா அணியுடன் இரண்டு போட்டியிலும், ஹைதராபாத் அணியுடன் ஒரு போட்டியிலும், சென்னை அணியுடன் ஒரு போட்டியிலும் மோத உள்ளது.

ஒரு வேளை இன்று நடக்கும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியிடம் ரோகித் தலைமையிலான மும்பை அணி தோல்வியடைந்தால் மும்பை அணியின் பிளே ஆஃப் சுற்று கேள்வி குறி தான். அடுத்து வரும் மூன்றில் இரண்டு போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், எவ்வளவு பெரிய அணியையும் எளிதில் வீழ்த்தும் வல்லமை படைத்தவை. மேலும் அந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்தடுத்த போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டும்.

எனவே மும்பை அணி அடுத்து வரும் மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. இதனால் இன்றைய சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை கண்டிப்பாக மும்பை வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒரு வேளை தோனி தலைமையிலான சென்னை அணியிடம் மும்பை அணி தோல்வி அடைந்தால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றை இழக்கும் அபாயம் உள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.