பெங்களுர் அணிக்கு பெரும் பின்னடைவு காயம் காரணமாக வெளியேறும் டேல் ஸ்டெயின்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது பெங்களுர் அணி. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் பலவீனமாக காணப்பட்டனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை முடித்து கொண்டு பெங்களுர் அணியில் இணைந்தார் நாதன் குல்டர் நைல்.

இவரது வருகை அந்த அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து முழுமையாக விலகினார் நாதன் குல்டர் நைல்.

இதனால் ஐ.பி.எல் தொடரின் நடு பாதியில் பெங்களுர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் தென் ஆப்ரிக்கா வீரர் டேல் ஸ்டெயின். அவரின் அனுபவமும், வேகமும் பெங்களுர் அணிக்கு வெற்றியை பெற்று தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே பெங்களுர் அணியும் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றது. ஸ்டெயின் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் இரண்டு போட்டிகளில் 4 லிக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து தோள்பட்டை ஏற்பட்ட காயம் காரணமாக பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் டேல் ஸ்டெயின் ஓய்வு எடுத்து கொண்டார். இந்நிலையில் அடுத்த போட்டியில் பங்கேற்பார் என எதிர் பார்க்கப்பட்ட ஸ்பெயின் தற்போது காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தொடர் தோல்விகளில் இருந்து வெற்றி பாதைக்கு திரும்பி உள்ள பெங்களுர் அணி, அடுத்தடுத்த வரும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் டேல் ஸ்டெயின் இழப்பு அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.