அர்ஜுனா விருது பி.சி.சி.ஐ அதிரடி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்களுக்கு அர்ஜுனா விருதை வழங்கி கவுரவித்து வருகிறது இந்திய அரசாங்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு தகுதியான இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது பி.சி சி.ஐ.

இதில் மூன்று இந்திய கிரிக்கெட் வீரர்களும், ஒரு இந்திய கிரிக்கெட் வீராங்கனையும் இடம் பெற்றுள்ளார். இது குறித்து பேசிய பி.சி.சி.ஐ மூத்த அதிகாரி கூறியதாவது., இந்தாண்டுக்கான அர்ஜுனா விருது பரிந்துரை சீனியாரிட்டி படி தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இந்திய அணியின் ஆல் ரவுண்டரும் தற்போது சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வரும் ரவீந்தர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் பூணம் யாதவ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு (CoA) மற்றும் பி.சி.சி.ஐ தலைவர்கள் இன்று கூடி பேசி இந்த பரிந்துரையை முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.